கர்ப்பிணிகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (09) முதல் ஆரம்பிக்கப்படும் என சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை மைய்யப்படுத்தி, இந்த நடவடிக்கை இன்று (09) ஆரம்பிக்கப்படும் என்றனர்.

தடுப்பூசியை செலுத்திக்கொள்வதற்கு விருப்பமுள்ள கர்ப்பிணிகளுக்கே இந்த தடுப்பூசி செலுத்தப்படுவதாக, குடும்ப சுகாதார பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி த சில்வா தெரிவித்துள்ளார்.