புதுக்குடியிருப்பு – ஆனந்தபுரம் கிராமத்தில் இருந்து நேற்று (09) இரவு, நந்திக்கடலுக்கு தொழிலுக்கு சென்றவர், இன்று (10) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் பிரோத பரிசோதனைக்காக மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்படவுள்ளதுடன், இவரது உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி..

முல்லைத்தீவு – நந்திக்கடல் பகுதியில், கடற்றொழிலுக்குச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த,  5 பிள்ளைகளின் தந்தையான வேலு கணேஸ் (வயது 44) என்பவரே, இவ்வாறு காணாமல் போயுள்ளதாக, முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த குடும்பஸ்தர், நந்திக்கடலில் மீன்பிடிப்பதற்காக நேற்று  (09) இரவு, வீட்டில் இருந்து சென்ற சிலையில், இதுவரை வீடு திரும்பவில்லை என, உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.