இடர் மிகு சூழலில் பாதிப்பின் வலியோடு இன்னல்பட்டும் தொழிலுக்குச் செல்ல முடியாமலும் வாழுகின்ற எம் உறவுகளுக்காக

தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அனுசரணையில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகர சபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் ஒழுங்கமைப்பில்

வவுனியா கோவில்குளம், கோவிற்புதுக்குளம், தெற்கிலுப்பைக்குளம், இறம்பைக்குளம் வெளிக்குளம், சின்னப்புதுக்குளம், சிதம்பரபுரம், கணேசபுரம், கோமரசன்குளம், திருநாவற்குளம் புளியாலங்குளம்

பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு 400க்கும் மேற்பட்ட உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.