இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 63 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,136 ஆக அதிகரித்துள்ளது.

2021 மே 23 தொடக்கம் மே 31 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று (12) உறுதிப்படுத்தியுள்ள கொவிட் 19 தொற்று மரணங்களின் எண்ணிக்கை 12 ஆகும்.

ஜூன் 01 தொடக்கம் ஜூன் 11 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று (12) உறுதிப்படுத்தியுள்ள கொவிட் 19 தொற்று மரணங்களின் எண்ணிக்கை 51 ஆகும்.

நேற்று (12) கொவிட் மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.