மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரான அர்ஜூன ஒபேசேகர, உயர் நீதிமன்றத்தின் நீதியரசராக, சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், இன்று (14) முற்பகல் அவர் சத்தியபிரமாணம் செய்தார்.

அத்துடன், மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

மேலும், மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சஷி மஹேந்திர மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசராகவும் சத்தியப்பிரமாணம் செய்தார்.