இலங்கை கடற்பகுதியில் தீ விபத்துக்கு உள்ளான எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் கெப்டன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொந்த பிணையில்  அவரை கொழும்பு மேல் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள குறித்த கப்பலின் கெப்டன் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் கெப்டனான ரஷ்ய பிரஜை, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று மதியம் கைதுசெய்யப்பட்டிருந்தார்.