இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே அவர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையிலான விசேட சந்திப்பு இன்று கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் இரா சம்பந்தன், தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்,

இந்திய தரப்பில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே அவர்களுடன் பிரதி உயர்ஸ்தானிகர், இந்திய தூதரக அரசியல் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர் .

சுமார் இரண்டு மணி நேரம் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது, அரசியல் தீர்வு, இன்றைய நிலைமைகள், கொவிட் தடுப்பூசிக்கான பற்றாக்குறை, அரசின் மாகாண அதிகாரங்களை பறிக்கும் செயற்பாடுகள் என்பன தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன் போது, மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடில்
மக்கள் மாகாண சபையை மறந்து விடுவார்கள். ஆகவே மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவதற்கான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்று இந்திய தூதுவர் தெரிவித்துள்ளார்.