யாழ். வடலியடைப்பைச் சேர்ந்த நடராஜா கிருஷ்ணாம்பிகை அவர்கள்  இன்று கனடாவில் காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். இவர் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மத்திய குழு உறுப்பினர் தோழர் கணேந்திரன் மற்றும் தோழர் வாணி ஆகியோரின் அன்புத் தாயார் ஆவார்.

அமரர் கிருஷ்ணாம்பிகை அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர்,  உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
17.06.2021.