இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவராக செயற்பட்ட ஜெனரல் (ஓய்வு) தயா ரத்நாயக்கவுக்கு புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அவர், கைத்தொழில் அமைச்சின் புதிய செயலாளராக இன்று(18) நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், துறைமுக அதிகாரசபையின் புதிய தலைவராக நிஹால் கெப்பற்றிபொல நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.