பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி​ பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண, உடன் அமுலுக்கு வரும் வகையில், சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன்,  பொலிஸ்மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.