துறைமுக அதிகார சபையின் தலைவராக கெப்டன் நிஹால் கெப்பெட்டிபொல  நியமிக்கப்பட்டுள்ளார். துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன நியமனக் கடிதத்தை  நிஹால் கெப்பெட்டிபொலவிற்கு வழங்கி வைத்துள்ளார்.

நிஹால் கெப்பட்டிபொல ஹார்பர் மாஸ்டராகவும் இலங்கை துறைமுகங்கள் அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.