சுகாதார அமைச்சின் அனுமதி கிடைத்ததும் பாடசாலைகளை உடனடியாக திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து விஷேட நிபுணர் குழுவினர் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் அதியுச்ச சுகாதார பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாடசாலைகளை மீண்டும் திறப்பது பற்றி கவனம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.