2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் இன்று (22) ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்காளர் இடாப்பு திருத்தத்த டிவம் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக, புதிய வாக்காளர்களின் தரவுகளை கிராம உத்தியோகத்தர் பெற்று ஆவணத்தை புதுப்பிக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா கூறியுள்ளார்.

வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ள போதும் கொரோனா தொற்று நிலையால் தாமதம் ஏற்படலாம் என கூறப்படுகின்றது.