நாட்டில் நேற்று முன்தினம் (21) மேலும் 71 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக நேற்று(22) அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக ​அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 33 பேர் ஆண்கள் எனவும், 38 பேர் பெண்கள் எனவும் அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நாட்டில் பதிவாக மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2704 ஆக அதிகரித்துள்ளது.