கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் மிகவும் துன்புற்றுக் கொண்டிருக்கும் நிலையில் வவுனியா பூவரசன்குளம் கிராம அலுவலர் திரு. விஜயருபன் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க தாலிக்குளத்தில் வசிக்கும் விசேட தேவைக்குட்பட்ட மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு சுவிஸ் வாழ் எம் உறவுகளான நந்தன், பெர்ணான்டோ, செல்வம் ஆகிய குடும்பங்கள் கழகத்தின் சுவிஸ் கிளை ஊடாக வழங்கிய நிதியில் 33 குடும்பங்களுக்கு தலா ரூபாய் 1500/= பெறுமதியான உலருணவுப் பொருட்கள் இன்று முற்பகல் 11.30 மணியளவில் வழங்கி வைக்கப்பட்டன.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் ஆலோசனைக்கமைய கட்சியின் வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர் வே.குகதாசன், பிரதேச விசேட தேவைக்குட்பட்டோர்க்கான புனர்வாழ்வுக்குழுவின் போசகர் கண்ணதாசன் ரஞ்சினி, சமூக சேவையாளர் சர்வேஸ்வரன் தனராணி ஆகியோர் உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்கள். பிரதேச இளைஞர் யுவதிகளும் இதில் கலந்து கொண்டிருந்தார்கள்.