டெல்டா திரிபு குறித்து கவனயீனத்துடன் செயற்பட்டால், அது இலங்கை முழுவதும் பரவும் அபாயம் ஏற்படக்கூடும் என விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நீண்ட பரிசோதனைகளுக்கு அமையவே, வைரஸ் திரிபுகளை வெவ்வேறாக அடையாளம் காண முடியும்.
இந்தியாவில், முதல்முறையாக டெல்டா திரிபு தொற்று உறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டு, சில மாதங்களின் பின்னரே பரவல் நிலை ஏற்பட்டது.
பரவுவதற்கு இடமளித்தால் மாத்திரமே, வைரஸ் வேகமாக தீவிரமடையும்.
சுகாதார விதிமுறைகளை உரிய முறையில் கடைப்பிடிக்காமையே இந்தப் பரவலுக்கு காரணமாகும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.