கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் மிகவும் துன்புற்றுக் கொண்டிருக்கும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் மேற்கு, கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய், கணுக்கேணி கிழக்கு ஆகிய கிராமங்களில் வசிக்கும் 46 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் 04 தனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்கள் என ஐம்பது குடும்பங்களுக்கு கழகத்தின் பிரான்ஸ் கிளை தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களின் நிதியில் தலா ரூபாய் 1460 பெறுமதியான உலருணவுப் பொருட்கள் நேற்று (26.06.2021) வழங்கி வைக்கப்பட்டன.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் பொருளாளர் தோழர் க.சிவநேசன்(பவன்), கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் தவராஜா மாஸ்டர், உறவுக்கு கரம் கொடுப்போம் அமைப்பின் பிரதிநிதி மாதவன்,

கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் ஜூட், கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் தோழர் நகுலன் ஆகியோர் உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்கள்.