கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் மிகவும் துன்புற்றுக் கொண்டிருக்கும் நிலையில் வவுனியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வறுமைக் கோட்டிற்குட்பட்ட ஐம்பது குடும்பங்களுக்கு தலா 1500 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

சமளங்குளம் கிராமத்தில் 15 குடும்பங்களுக்கு சமளங்குளம் கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் சோமசுந்தரம் அவர்களின் தலைமையில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தோழர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்), கட்சியின் நகரசபை உறுப்பினர் தோழர் சு காண்டீபன், சமூக சேவையாளர் தர்சி ஆகியோர் உலருணவுப் பொதிகளை இன்று வழங்கி வைத்தார்கள்.

தொடர்ந்து மதுரா நகரில் 16 குடும்பங்களுக்கு சமூக சேவையாளர் யோகேஸ் அவர்களின் தலைமையில் தோழர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்), தோழர் சு காண்டீபன் ஆகியோர் உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்ததுடன், கோவில்குளம், தெற்கிலுப்பைக்குளம், வைரவப்புளியங்குளம், திருநாவற்குளம், வேப்பங்குளம் ஆகிய பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட மேலும் 19 குடும்பங்களுக்கும் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.