கொரோனா வைரஸ் தொற்றாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சையளிப்பதற்கான புதிய வேலைத்திட்டம் ஒன்றை சுகாதார அமைச்சு இன்று (28) முதல் ஆரம்பித்துள்ளது.

இதன்படி, வீடுகளில் தங்க வைக்கப்படும் தொற்றாளர்களுடன் தினமும் தொலைபேசி ஊடாக வைத்தியர்கள் தொடர்புக்கொண்டு, தொற்றாளர்களின் நிலைமையைக் கண்காணிப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவை ஏற்படும் பட்சத்தில் தொற்றுக்குள்ளானோரை வைத்தியசாலைகளில் அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென  சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.