பெற்றோல் விலையேற்றம், தமிழ் மக்களின் பிரச்சினை உள்ளிட்ட பலவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,  யாழ்ப்பாணத்தில், இன்று (29) காலை, கண்டன சைக்கிள் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்கு முன்னால் இருந்து ஆரம்பமான இந்த சைக்கிள் பேரணி, மானிப்பாய் பிரதேச சபை முன்றல் வரை சென்று நிறைவடைந்தது.

வடக்கு மீனவர் சமாசம் மற்றும் மானிப்பாய் பிரதேச சபை ஆகியவற்றின் இணைஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் பேரணியில், பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன். இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் அ.ஜெபநேசன், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர், பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலரும்; கலந்துகொண்டனர்.