கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, வெளிநாடுகளில் உள்ள 142 இலங்கையர்கள், இதுவரையில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

கடந்த வருடம் மார்ச் மாதம் முதல், தற்போது வரையிலேயே 142 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாகவும், வெளிநாடுகளில் உள்ள 4,800 இலங்கையர்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தொற்றுக்குள்ளாகியிருந்த 4,800 பேரில் இதுவரையில் 4,600 பேர் குணமடைந்துள்ளதோடு மத்திய கிழக்கு நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராஜ்ஜியம், பஹ்ரைன், குவைட், ஓமான், கட்டார் உள்ளிட்ட 16 நாடுகளில் வாழும் இலங்கையர்களே கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்துள்ள அனைவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் கீழ் பதிவு செய்து, தொழில் வாய்ப்புகளுக்காக சென்றுள்ளவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.