கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் மிகவும் துன்புற்றுக் கொண்டிருக்கும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அம்பிலாந்துறை பிரதேசத்தில் வசிக்கும் வறுமைக் கோட்டிற்குப்பட்ட மற்றும் முதியோர்களைக் கொண்ட 48 குடும்பங்களுக்கு

கழகத்தின் பிரான்ஸ் கிளை தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களின் நிதியில் தலா ரூபாய் 1565/= பெறுமதியான அரிசி மற்றும் மா அடங்கிய பொதிகள் இன்று முற்பகல் வழங்கி வைக்கப்பட்டன.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தோழர் நிஸ்கானந்தராஜா(சூட்டி) , கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களான தோழர் ராகவன்(வரதன்), தோழர் கிருபைராஜா(கிருபா மாஸ்டர்),

கிராம சேவகர் எஸ்.உதயகுமார், அபிவிருத்தி உத்தியோகத்தர் சிவகுமாரி, சமுர்த்தி உத்தியோகத்தர் அ.சிவகலா, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் இளங்கீதன் ஆகியோரால் உலருணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.