இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு சுற்றுலாச் செல்வதற்கு,தமது நாட்டு பிரஜைகளுக்கு  ஐக்கிய அரபு இராச்சியம் தடை விதித்துள்ளது.இதற்கமைய, இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்வதையே ஐக்கிய அரபு இராச்சியம் தடை செய்துள்ளது.

அத்துடன், இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கும் இந்த மாதம் 21ஆம் திகதி வரை, அந்நாடு  தடைவிதித்துள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் டெல்டா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால், ஐக்கிய அரபு இராச்சியம் இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.