3 தாதியர் சங்கங்கள் நேற்று(01) ஆரம்பித்த  சுகயீன விடுமுறை போராட்டம் இன்று (02) தொடர்கிறது. அரச தாதி அதிகாரிகளின் சங்கம், அகில இலங்கை தாதியர் சங்கம், அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் என்பன இந்த போராட்டத்தில் களமிறங்கியுள்ளன.

தாதியர்களின் போராட்டம் காரணமாக வைத்தியசாலைகள் பலவற்றின் நாளாந்த செயற்பாடுகள் நேற்று பாதிக்கப்பட்டிருந்தன.

எனினும், திடீர் மற்றும் அத்தியாவசிய சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்ல தீர்மானித்துள்ளதாக தாதியர் சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.

பதவி உயர்வு மற்றும் தாதிய கொடுப்பனவு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.