100க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளை  இந்த மாத இறுதிக்குள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வியமைச்சு அறிவித்துள்ளது. சுகாதாரத் துறையினரின் அனுமதியுடன், கடுமையான சுகாதார நடைமுறைகளின் கீழ், குறித்த பாடசாலைகள் திறக்கப்படும் என, கல்வியமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கூறியுள்ளார்.

கல்வி அமைச்சில் இன்று (02)  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.