கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் மிகவும் கஸ்ரப்படுகின்ற நிலையில் வவுனியா நகரசபையின் சுகாதாரப் பிரிவு மற்றும் வேலைப்பகுதி ஊழியர்களில் பெண் ஊழியர்கள் 25 பேருக்கு கழகத்தின் ஜேர்மன் கிளை தோழர்களின் நிதியில் தலா 1500 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொருட்களுடன் தலா 500 ரூபாய் பணமும்,

மேலும் 40 ஊழியர்களுக்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் நிதியில் தலா 1250 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொருட்களும் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், நகரசபை உறுப்பினருமான தோழர் க.சந்திரகுலசிங்கம்(மோகன்), கட்சியின் நகரசபை உறுப்பினர் தோழர் சு.காண்டீபன், நகர சபை உறுப்பினர் ராசலிங்கம் ஆகியோரால்
மேற்படி உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.