கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் மிகவும் கஸ்ரப்படுகின்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு புதுமண்டபத்தடி கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட முதியவர்கள் 33 பேருக்கு

புளொட் ஜேர்மன் கிளை தோழர்களின் நிதியில் தலா 1500 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொருட்கள் இன்று (2021/07/03) வழங்கி வைக்கப்பட்டன.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் உப தலைவர்களில் ஒருவரும் மண்முனை மேற்கு பிரதேச சபை உபதவிசாளருமான பொன்.செல்லத்துரை (தோழர் கேசவன்), கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், மட்டு மாநகர சபை உறுப்பினருமான ம.நிஸ்கானந்தராஜா (தோழர் சூட்டி)

மற்றும் புதுமண்டபத்தடி கிராமசேவகர் ஜீவராசா, சமுர்த்தி உத்தியோகஸ்தர் கு.ஜெயகுமார் ஆகியோரால் மேற்படி உலருணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.