கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் மிகவும் கஸ்ரப்படுகின்ற நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி கருக்காய்த்தீவு, கிளிநொச்சி விவேகானந்தநகர், ஊற்றுப்புலம், கோணாவில், அக்கராயன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வறுமைக் கோட்டிற்குப்பட்ட பெண் தலைமைத்துவ மற்றும் முதியோர்களைக் கொண்ட 25 குடும்பங்களுக்கு புளொட் ஜேர்மன் கிளை தோழர்களின் நிதியில் தலா 2000 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொருட்கள் இன்று (2021/07/04) வழங்கி வைக்கப்பட்டன.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மத்திய குழு உறுப்பினரும் கட்சியின் மாவட்ட செயலாளருமான தோழர் மணியம் (வே.சிவபாலசுப்ரமணியம்), கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் தோழர் நேசன்

மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்களான ஜெயசீலன், சசிநந்தன், நாகேஸ்வரி ஆகியோரால் உலருணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.