தமிழ் தேசியக் கட்சிகளுக்கிடையேயான ஒற்றுமை முயற்சி தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

தமிழ் தேசியப் பரப்பில் இருக்கின்ற அனைத்து கட்சிகளுடனும் தனித்தனியாகவோ கூட்டாகவோ பேசி எல்லாக் கட்சிகளையும் ஒருமித்த கருத்தின்கீழ் கொண்டுவந்து கொள்கை அடிப்படையில் ஒரு வேலைத்திட்டத்தை முன்வைத்து அதன்கீழ் ஒற்றுமையை உருவாக்கும் முயற்சியாக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதனடிப்படையில் விரைவில் ஏனைய தமிழ் கட்சிகளின் தலைவர்களுடன் தனித்தனியாகவோ கூட்டாகவோ கலந்துரையாடுவதற்கு இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.