கல்கிஸை பகுதியிலிருந்து 15 வயதான சிறுமியை இணையத்தளம் மூலம் பாலியல் நடவடிக்கைகளுக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

சிறுமியை இணையத்தளம் மூலமாக பெற்றுக்கொண்ட மாலைத்தீவு பிரஜை ஒருவரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என அவர் கூறினார்.

அத்துடன், அந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்காக அறை ஒன்றை வழங்கியிருந்த ஹோட்டல் ஒன்றின் முகாமையாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தற்போதுவரை சிறுமியின் தாய் உட்பட கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மேலும் 300 பேர் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவரான பேராசிரியர் முதித்த வித்தியாப்பத்திரண தெரிவித்துள்ளார்.