2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்குரிய விண்ணப்பங்களை Online ஊடாக மாத்திரம் அனுப்பிவைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் அனைவரும் இந்த அறிவித்தலை பின்பற்ற வேண்டும் என கல்வி அமைச்சு அறிக்கை வௌியிட்டுள்ளது.

அதற்கமைய, இன்று (05) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை, உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது