சுகாதார அமைச்சர் – வர்த்தக தொழிற்சங்கங்களுடனான கலந்துரையாடலை தொடர்ந்து சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் தங்களது தொடர்ச்சியான வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளன.

முறையான பதவி உயர்வு முறையை வழங்குதல் மற்றும் ஊதிய முரண்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட 14 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று தொடக்கம் பொது சுகாதார பரிசோதகர் உட்பட சுகாதார சேவையின் 14 தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியான வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இதன் விளைவாக, வைத்தியசாலைகளில் வெளிநோயாளர்களுக்கு மருந்து விநியோகம், பி.சி.ஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனை, எம்.ஆர். ஸ்கேன் உட்பட பல சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.