மட்டக்களப்பு-திருகோணமலை வீதியில் கருவாங்கேணி சந்திக்கு அருகே சிறைச்சாலை பஸ் மோதியதில் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (06) பிற்பகல் 2.45 மணியளவில் வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்புக்கு சென்று கொண்டிருந்த மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சொந்தமான பஸ் ஒன்று அதே திசையில் பயணித்த சைக்கிள் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தைத் தொடர்ந்து  65 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் வீதியின் நடுவில் வீசப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்போது, அதே திசையில் பயணித்துக்கொண்டிருந்த மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சொந்தமான மற்றொரு பஸ் அவர் மீது மோதியதில் அவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.