கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் மிகவும் கஸ்ரப்படுகின்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் தேராங்கண்டல் பகுதியில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 25 குடும்பங்களுக்கு புளொட் ஜேர்மன் கிளை தோழர்களின் நிதியில் தலா 1500 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொருட்களும் தலா 500 ரூபாய் பணமும் 04.07.2021 ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் பொருளாளர் தோழர் க.சிவநேசன்(பவன்), கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் தவராஜா மாஸ்டர், கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் யூட், கட்சியின் துணுக்காய் பிரதேச சபை உப தவிசாளர் சிவகுமார், உறவுக்கு கரம் கொடுப்போம் அமைப்பின் பிரதிநிதி மாதவன் ஆகியோர் மேற்படி உதவியை வழங்கி வைத்தார்கள்.