யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வாழ்விடமாகவும் கொண்ட திரு. செல்லையா பரமலிங்கம் அவர்கள் 03.07.2021 சனிக்கிழமை டென்மார்க்கில் காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

இவர் தோழர் பாபு (ஞானச்சந்திரன் – டென்மார்க்) அவர்களின் அன்புத் தந்தையார் ஆவார்.

அமரர் பரமலிங்கம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
09.07.2021.