பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எம்.யுமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் முக்கியமான சந்திப்பொன்று ​நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

இராப்போசனத்துடன் இடம்பெற்ற இந்த சந்திப்பில், பிரதமரின் பாரியாரும் கலந்துகொண்டிருந்தார். இதன்போது பல முக்கியமான விடயங்கள் குறித்து, இருவரும் கலந்துரையாடினர் என அறியமுடிகின்றது.