கொரோனா பாதிப்பு காரணமாக யாழ் மாவட்டத்தில் வசிக்கும் தேவையுடைய சில
கழக உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு புளொட் ஜேர்மன் கிளை தோழர்களின் நிதியிலிருந்து நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிதியினை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் பா.கஜதீபன், கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அ.கௌதமன், கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் இரா.பிரேம்குமார் ஆகியோர் கழக உறுப்பினர்களின் வீடுகளுக்குச் சென்று கையளித்தார்கள்.