அமெரிக்காவால் இலங்கைக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த   4ம் நிலை பயண எச்சரிக்கை 3ம் நிலை பயண எச்சரிக்கையாக குறைக்கப்பட்டுள்ளது. 2021 மே, 24ம் திகதி இலங்கைக்கு அமெரிக்க வெளியுறவுத்துறையினால் 4ம் நிலை பயண எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டது.

பின்னர், ஜூலை, 06ம் திகதி முதல் 3ம் நிலை பயண எச்சரிக்கையாக குறைக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இது தொடர்பில் டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளது.

அதில், இலங்கை தொடர்பில் நிலை 03 முதல் நிலை 04 வரையிலான பயண ஆலோசனை வழங்கப்பட்டுள்ளமையானது நாட்டில் நிலவும் கொவிட்-19 நிலைமை கருதி வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

எனினும், பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பில் முன்னர் விடுக்கப்பட்ட எச்சரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.