முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த திகதிகளில், 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தர பரீட்சை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியன நடைபெறாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பரீட்சைகள் தொடர்பில் மேலும் ஆராய்ந்த பின்னர், பரீட்சைகளை நடத்துவது தொடர்பான திகதிகள் எதிர்வரும் காலங்களில் அறிவிக்கப்படும் என, கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.