லண்டனில் வசிக்கும் எமது கட்சி செயற்பாட்டாளர் திரு. தர்மலிங்கம் நாகராஜா அவர்கள் தனது தந்தையாரான அமரர் கந்தையா தர்மலிங்கம் அவர்களின் ஆறாமாண்டு நினைவை முன்னிட்டு நேற்றையதினம் கொரோனா பாதிப்பினால் வேலைவாய்பின்றி கஸ்ரப்படுகின்றவர்களுக்கு நிவாரண உதவியினை வழங்கியுள்ளார்.

முள்ளியவளையில் 30 குடும்பங்களுக்கும், கிளிநொச்சி விவேகானந்த நகரில் கிராம சேவகர் விஜிதா, அதிபர் அன்ரன் டயஸ் ஆகியோர் முன்னிலையில் 25 குடும்பங்களுக்கும், திருநாவற்குளத்தில் 75 குடும்பங்களுக்கும் தலா 1500 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் பொருளாளர் க.சிவநேசன்(பவன்), கட்சியின் தேசிய அமைப்பாளர் தவராஜா மாஸ்டர், கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் யூட், கட்சியின் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் வே.சிவபாலசுப்ரமணியம் , கட்சியின் செட்டிக்குளம் பிரதேச சபை தவிசாளர் சு.ஜெகதீஸ்வரன் (சிவம்), உறவுக்கு கரம் கொடுப்போம் அமைப்பின் பிரதிநிதி மாதவன், தோழர்கள் சந்திரன், ரூமி ஆகியோர் உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளார்கள்.