மேல் மாகாணத்தில் வசிப்போர்,  கொவிட் 19 தடுப்பூசிகளை  பெற்றுக் கொள்வற்காக முற்பதிவுகளை மேற்கொள்வதற்கான இணையதளத்தை சுகாதார அமைச்சு அறிமுகம் செய்துள்ளது.

அதன் அடிப்படையில், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் வசிப்போர் https://vaccine.covid19.gov.lk என்ற இணையதள முகவரியின் ஊடாக முற்பதிவுகளைச் செய்யலாம் என அமைச்சு அறிவித்துள்ளது.