எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் பாடசாலைகளை திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளனர். பாடசாலை ஆரம்பமாவதற்கு முன்னதாக அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு என்றும் அவர் கூறியுள்ளார்.

நாரஹேன்பிட்ட இராணுவ வைத்தியசாலையில் இன்று (12) இடம்பெற்ற ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நிகழ்வில்  அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.