கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் மிகவும் கஸ்ரப்படுகின்ற நிலையில் வவுனியா கந்தபுரம் கிராம அலுவலர் பிரிவில் வறுமைக் கோட்டிற்குட்பட்ட 25 குடும்பங்களுக்கு புளொட் பிரித்தானிய கிளை தோழர்களின் நிதியில் தலா 1200 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொருட்கள் கிராம சேவகர் திருமதி கௌசல்யா லெனின் அவர்களின் ஒழுங்கமைப்பில் இன்று (2021/07/13) வழங்கி வைக்கப்பட்டன.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் க.சந்திரகுலசிங்கம்(மோகன்), கட்சியின் வவுனியா நகரசபை உறுப்பினர் சு காண்டீபன், கட்சியின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் நந்தகுமார் ஆகியோரால் உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.