கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  மேலும் 37 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். 18 ஆண்களும் 19 பெண்களுமே நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். அதில், 30 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் 7 பேர் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில்,  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,611 ஆக அதிகரித்துள்ளது.