கழகத்தின் வன்னி மாவட்ட முன்னாள் பொறுப்பாளரும், வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தோழர் வசந்தன் (சரவணபவானந்தன் சண்முகநாதன்) அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று அவர் மற்றும் அவரது புதல்வன் செல்வன். சண்முகநாதன் வற்சலன் ஆகியோரின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

அஞ்சலி நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்), கட்சியின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் த.யோகராஜா(யோகன்),

கட்சியின் நிர்வாக செயலாளர் பற்றிக், கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் கொன்சால், கட்சியின் வவுனியா நகரசபை உறுப்பினர் சு காண்டீபன், பிரதேச சபை உறுப்பினர் சசி,

கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ரவி மற்றும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிவா, ஐயா உள்ளிட்டவர்களும், தோழர் வசந்தன் அவர்களின் உறவினர்கள், நண்பர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.