தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினம் கடந்த 13ம் திகதிமுதல் நாளை 16ம் திகதி வரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், தலைவர்கள், அனைத்துப் போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் வகையில் வீரமக்கள் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இன்றைய அஞ்சலி நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்), கட்சியின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் த.யோகராஜா(யோகன்),

கட்சியின் நிர்வாக செயலாளர் பற்றிக், கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் கொன்சால், கட்சியின் வவுனியா நகரசபை உறுப்பினர் சு காண்டீபன், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் சிவா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.