புளொட்டின் 32வது வீரமக்கள் தினம் அம்பாறை மாவட்டம் காரைதீவில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் தோழர் சங்கரி அவர்களின் தலைமையில் இன்றுமாலை 5.30 மணியளவில் சுகாதார சட்டதிட்டங்களுக்கு அமைவாக நடைபெற்றது.

இதன்போது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஸ்தாபகரும் செயலதிபருமான அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் அவர்களுக்கும், தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இவ் அஞ்சலி நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் உப தலைவர்களில் ஒருவரான தோழர் கேசவன், கட்சியின் மத்திய குழு உறுப்பினர் தோழர் முரளி மற்றும் தோழர் கங்கா ஆகியோர் சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.