கொரோனா பாதிப்பு காரணமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வறுமை நிலையிலுள்ள மற்றும் விசேட தேவையுடையவர்களைக் கொண்ட கிரான்குளத்தைச் சேர்ந்த 42 குடும்பங்களுக்கு புளொட் பிரித்தானிய கிளை தோழர்களின் நிதியுதவியில் தலா 2315 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொருட்கள் கழகத்தின் வீரமக்கள் தினமான இன்றைய தினத்தில் (16-07-2021) வழங்கி வைக்கப்பட்டது.

கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ம.நிஸ்கானந்தராஜா (சூட்டி), கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களான ந.ராகவன், கா.கமலநாதன், க.கிருபைராஜா மற்றும் ச.அருள்ராஜா, த.குகன் ஆகியோர் உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்கள்.