ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மட்டக்களப்பு மாவட்ட கிளையினரால் 16 -07-2021 இன்று காலை 9.30 மணியளவில் கிரான்குளம் சீ மூன் ஹோட்டல் மண்டபத்தில் அமைதியான முறையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மாவட்ட அமைப்பாளர் ம.நிஸ்கானந்தராஜா தலைமையில் வீரமக்கள் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

அஞ்சலி நிகழ்வில் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்களான ந.ராகவன், கா.கமலநாதன், க.கிருபைராஜா, மாவட்ட குழு உறுப்பினர் ஞா.தவராஜா, ச.அருள்ராஜா, கழக உறுப்பினர்கள் மற்றும் மறைந்த கழக உறுப்பினர்களின் உறவினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.