கொரோனா பாதிப்பு காரணமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வறுமை நிலையிலுள்ள மன்னார் மாவட்டத்தின் பாலம்பிட்டி, முள்ளிக்குளம், தட்சணாமருதமடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்கு புளொட் பிரித்தானிய கிளை தோழர்களின் நிதியுதவியில் உலருணவுப் பொருட்கள் கழகத்தின் வீரமக்கள் தினமான இன்றைய தினத்தில் (16-07-2021) வழங்கி வைக்கப்பட்டன.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட் )யின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் கொன்சால், கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்கள் மணியம், அமலி மற்றும் பிரதேச கட்சி செயற்பாட்டாளர் சந்திரன் ஆகியோர் உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்கள்.